டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-29 16:52 GMT
வெளிப்பாளையம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரவேல் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
 கடந்த 10 ஆண்டுகாலத்திற்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றுப வர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.டாஸ்மாக் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
வெள்ளை அறிக்கை
டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார், செயலாளர் மகேந்திரன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மோகன், மாவட்ட துணைசெயலாளர்கள் கண்ணன், மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கோபால் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்