சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-04-29 16:49 GMT
வேதாரண்யம், ஏப்.30-
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர்  கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், நாகை காயாரோகணசாமி கோவில், அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், அந்தணப்பேட்டை அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்