வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி; 3 பேர் மீது போலீசில் புகார்

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-04-29 16:45 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் போலையார்புரத்தை சேர்ந்த தனராஜ் சாலமோன் உள்ளிட்ட சிலர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘நான் சாத்தான்குளத்தில் ஸ்டூடியோ நடத்தி வருகிறேன். எனது மனைவிக்கு தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 3 பேர் ரூ.2½ லட்சம் பணம் வாங்கினர். பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தி வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக சான்றிதழ் வழங்கினர். அதன்பிறகு நீண்ட நாட்களாக வங்கியில் பணிக்கு சேருவதற்கான ஆணை வழங்கப்படவில்லை. இதனால் வங்கியில் விசாரித்த போது, அது போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, பணத்தை தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதேபோன்று பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்