திருமணமாகாத விரக்தியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

திண்டுக்கல் அருகே திருமணமாகாத விரக்தியில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-29 16:03 GMT
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சீலப்பாடி பொதுப்பணித்துறை காலனியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் அருண்பாண்டி (வயது 25). கார் டிரைவர்.
இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு வரன் கிடைக்கவில்லை. இதனால் அருண்பாண்டி திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அருண்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்