புதுப்பேட்டை அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

புதுப்பேட்டை அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-04-29 16:00 GMT
புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு(வயது 62). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு, பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் வீடு புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து 4 பவுன் நகை, வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றனர். இதனிடையே வீட்டிற்கு வந்த வைரக்கண்ணு பீரோ உடைந்து கிடந்ததையும், நகை திருடுபோனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்