காண்ட்ராக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
காண்ட்ராக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
பொன்னேரி மூகாம்பிகை நகரில் வசிப்பவர் செல்வம் (வயது 40). போர்வெல் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கவரப்பேட்டை, பூவலம்பேடு கிராமத்தில் உள்ள வங்கிக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார். அங்கு பணி முடிந்தவுடன் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் தங்க நகை, ரூ.95 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.