ரெயிலில் அடிபட்டு மயில் சாவு
கொடைரோடு அருேக ரெயிலில் அடிபட்டு மயில் இறந்துபோனது.
கொடைரோடு:
கொடைரோடு அருகே தர்மாபுரி ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் மயில் ஒன்று இறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹீமாயூன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அது, ½ வயது ஆண் மயில் என்பதும், ரெயிலில் அடிபட்டு இறந்துபோனதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த மயிலின் உடலை திண்டுக்கல் வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மயிலின் உடலை மருத்துவ பரிசோதனை செய்து, வனப்பகுதியில் புதைத்தனர்.