கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா கடத்தல்; 2 வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-04-29 15:14 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பெருவாயல் பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களது பையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்த ஆரம்பாக்கத்தை சேர்ந்த நரேந்திரன் (வயது 22) மற்றும் கெட்டணமல்லியை சேர்ந்த லோகேஷ் (19) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்