ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-04-29 15:00 GMT
பொன்னேரி அடுத்த தொட்டிமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தியா (வயது 23). அவுரிவாக்கம் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை.

இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்