ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிளில் பிரசார பயணம்

வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.

Update: 2022-04-29 14:55 GMT
திண்டுக்கல்:
மத்திய-மாநில அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நறுமண திரவியம், மாம்பழ கூழ், ஆயத்த ஆடை, தோல் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய அந்த சைக்கிள் பிரசார பயணம் பல்வேறு பகுதிகள் வழியாக நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தது. அப்போது திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முக்கிய சாலைகள் வழியாக நாகல்நகர் வந்தது. இதையடுத்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு நகர்க்குழு தலைவர் கார்த்திக்குமார் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநில தலைவர் ரெஜிஸ்குமார், துணை தலைவர் கோபிநாத், மாவட்ட செயலாளர் பாலாஜி, தலைவர் சிலம்பரசன், கவுன்சிலர் ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் சைக்கிள் பிரசாரம் புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்