திருவள்ளூர் அருகே மர தொழிற்சாலையில் தீ விபத்து

திருவள்ளூர் அருகே தனியாருக்கு சொந்தமான மர தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.

Update: 2022-04-29 14:53 GMT
தீ விபத்து

திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மரக்கட்டைகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட மரக்கட்டைகள் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ பரவியதால் அருகில் இருந்த ஆயில் டேங்கும் பற்றி எரிய தொடங்கியது.

ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்

இது குறித்து உடனடியாக திருவூர் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்கள் 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் அனைத்து பொருட்களும் எரிந்து தீக்கிரையானது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்து குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்