29 நிமிடங்களில் 108 யோகாசனம்: சிதம்பரம் மாணவன் சாதனை

29 நிமிடங்களில் 108 யோகாசனம் செய்து சிதம்பரம் மாணவன் சாதனை படைத்தான்.

Update: 2022-04-29 14:49 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்-ஹேமா. இந்த தம்பதியருக்கு சக்திவேல்(வயது 13) என்ற மகன் உள்ளான். இவன் சிதம்பரம் காமராஜ் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவயது முதலே ஆர்வத்துடன் யோகாசனம் கற்று வந்த சக்திவேலுவுக்கு யோகாசனம் செய்து உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. 
அதன்படி சக்திவேல் இன்று சிதம்பரம் மேலவீதியில் வெர்ட்ஜ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 29 நிமிடங்களில் 108 வகையான யோகாசனம் செய்து அசத்தினான். இதையடுத்து வெர்ட்ஜ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு இயக்குனர் சுரேஷ்குமார், இணை இயக்குனர் சந்தோஷ் ஆகியோர் 29 நிமிடங்களில் 108 யோகாசனங்கள் செய்து சக்திவேல் உலக சாதனை படைத்ததாக அறிவித்தனர். சாதனை படைத்த மாணவனுக்கு சர்வமங்களா அகாடமி நிறுவன நிறுவனர்கள் பாலாஜி, சுகாந்தினி, யோகா ஆசிரியர் தெய்வானை, காமராஜர் பள்ளி தாளாளர் கஸ்தூரி, முதல்வர் சக்தி ஆகியோர் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

மேலும் செய்திகள்