பார்வையற்றோர், காது கேளாதோருக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்குவதற்காக நேர்காணல்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வையற்றோர், காது கேளாதோருக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்குவதற்காக நேர்காணல்;

Update: 2022-04-29 14:40 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வையற்றோர் மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த நிதியாண்டி 300 ஸ்மார்ட் செல்போன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

 இதற்கான நேர்காணல் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த கண் பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் காப்பாளர்கள் மூலம் வந்தனர்.

 அவர்கள் ஸ்மார்ட் செல்போன் பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நீண்ட வரிசையில் நின்று நேர்காணலில் பங்கேற்றனர்.

 இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இவர்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் ஸ்மார்ட் செல்போன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்