பொன்னேரி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; 6 பேர் கைது

பொன்னேரி அருகே 6 பேர் கொண்ட கும்பல் அரசு பஸ் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

Update: 2022-04-29 14:20 GMT
சென்னை கோயம்பேட்டில் இருந்து பொன்னேரி அருகே உள்ள சீமாபுரம் கிராமத்திற்கு, சென்னை மாநகர பஸ் சென்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் சிமாபுரத்திலிருந்து புறப்பட்ட அரசு பஸ், சோழவரம் அருகே உள்ள சிறுணியம் கிராமத்தின் வழியாக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல், அரசு பஸ் வழிவிடவில்லை என கூறி, தாங்கள் வைத்திருந்த கத்தியால் அரசு பஸ் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

இதுகுறித்து பஸ் டிரைவர் சோழவரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் (வயது 24), சுரேஷ் (22), கபிலன் (20), சதீஷ் (21), மற்றோறு விக்னேஷ் (25), கோகுல்ராஜ் (24) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்