தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
பள்ளி அருகில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தார்.
வாணியம்பாடி
ஆலங்காயம் ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி மந்தைவெளி தெருவில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் மின்சார கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் எது சென்றாலும் மூங்கில் கம்பு மூலம் மின் கம்பியை தூக்கிவிட்டுதான் செல்லும் நிலை உள்ளது. மின்கம்பி செல்லும் பாதைக்கு அருகில் பள்ளி நுழைவாயில் உள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவியது,
இதனை அடுத்து, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, அந்தப் பகுதி மின் வாரிய அதிகாரிகளை அழைத்து பேசி மின்கம்பியை சீரமைத்து உயிர்ச் சேதங்களை தவிர்க்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.