போலீஸ் பிடியில் சிக்கியவர் திடீர் சாவு
முல்லுண்டில் சட்டவிரோத பார்லரில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது போலீசில் சிக்கிய நபர் திடீரென மயங்கி விழுந்து பலியானார்.;
மும்பை,
முல்லுண்டில் சட்டவிரோத பார்லரில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது போலீசில் சிக்கிய நபர் திடீரென மயங்கி விழுந்து பலியானார்.
போலீசார் சோதனை
மும்பை முல்லுண்ட் பகுதியில் சட்டவிரோதமாக வீடியோ பார்லர் ஒன்று செயல்பட்டு வருவதாக சமூக குற்றத்தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று வீடியோ பார்லாில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இச்சோதனையில் அங்கு திலிப் சேஜ்பால் (வயது57) என்பவர் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.
திடீர் சாவு
போலீசில் பிடிபட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. திடீரென அவர் அங்கேயே மயங்கி சரிந்து விழுந்தார். போலீசார் அவரை மீட்டு மயக்கம் தெளிய வைக்க முயன்றனர். இதில் முடியாமல் போனதால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.........................................