வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்த் துறை இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீவிர சிகிச்சை பிரிவு பகுதி முழுவதையும் பார்வையிட்டு அங்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய மருத்துவ அலுவலரிடம் அறிவுறுத்தினார்.
மேலும், தூய்மை மருத்துவமனை தினவிழா நடந்து கொண்டிருப்பதால், அதன் சார்பாக மருத்துவமனை வளாகத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் முதன்மை மருத்துவ அலுவலர் அம்பிகா சண்முகம், டாக்டர் சிவசுப்பிரமணி, டேவிட் விமல்குமார் மற்றும் சுகாதார துறையையினர் உடனிருந்தனர்.