திருச்சி:
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கோபாலன் தலைமை தாங்கினார். ரகுநாதன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சகாதேவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, நோயாளிகளின் நலன் கருதி 1,200-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டய மருந்தாளுனர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் அரசாணை 5-ஐ ரத்து செய்ய வேண்டும். கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.