கடம்பூர் அருகே நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

கடம்பூர் அருகே நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2022-04-28 21:36 GMT
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே உள்ள நடூர்-மல்லியம்மன் துர்க்கம் செல்லும் ரோட்டில் உள்ள ஓட்டேரிகுட்டை பள்ளம் என்ற இடத்தில் நேற்று மாலை நாட்டு துப்பாக்கியுடன் சிலர் சுற்றி திரிவதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கடம்பூர் மல்லியம்மன் துர்க்கம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 36), சுப்பிரமணி (44), கடம்பூர் அந்தியூர்புதூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்