அறச்சலூர் பொன் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

அறச்சலூர் பொன் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-04-28 21:33 GMT
அறச்சலூர்
அறச்சலூர் பொன் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
பொன் மாரியம்மன்
அறச்சலூர் பொன் மாரியம்மன் கோவில் தேர் மற்றும் பொங்கல் திருவிழா கடந்த 6-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 8-ந் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோட்டம்
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் தேர் இழுக்க தொடங்கினர். அறச்சாலை அம்மன் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவிலை சுற்றி தேர் இழுத்து வரப்பட்டு தேர் நிலை சேர்ந்தது.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் மாவிளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்