தென்காசி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்
தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மதுக்கடைகள் மூடப்பட உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வருகிற மே 1-ந் தேதி (நாளை மறுநாள்) தொழிலாளர்கள் தினமான மே தினம் அனுசரிக்கப்படும். அதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.