மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம்
மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.
நெல்லை;
நெல்லை மாவட்டம் மானூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராமர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மானூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கொலைகள் நடைபெற்றன. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ராமர் திடீரென கன்னியாகுமரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.