பெண்ணை கர்ப்பமாக்கிய பூசாரி கைது

திசையன்விளை அருகே பெண்ணை கர்ப்பமாக்கிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-28 20:37 GMT
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த முருகேசபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 38). இவர் அங்குள்ள பிள்ளையார் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஜெயக்குமார் 19 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயக்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்