கர்நாடகத்தில் புதிதாக 154 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 154 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2022-04-28 20:26 GMT
பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று 10 ஆயிரத்து 319 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 142 பேரும், தட்சிண கன்னடாவில் 2 பேரும், கோலாரில் 2 பேரும், விஜயாப்புராவில் 2 பேரும், உத்தரகன்னடா, உடுப்பி, மண்டியா, தார்வார், சிக்கமகளூரு, பெங்களூரு புறநகரில் தலா ஒருவரும் உள்ளனர். 

ஒரே நாளில் 116 பேர் குணம் அடைந்தனர். 1,751 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.16 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்