செட்டிநாடு அரசு வேளாண் கல்லூரி தொடக்க விழா;கார்த்தி சிதம்பரம் எம்.பி, கலெக்டர் பங்கேற்பு

செட்டிநாடு அரசு வேளாண் கல்லூரி தொடக்க விழாவில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, கலெக்டர் பங்கேற்றனர்

Update: 2022-04-28 19:52 GMT
காரைக்குடி,
காரைக்குடி அருகே செட்டிநாட்டில் புதிய வேளாண்மை கல்லூரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். செட்டிநாட்டில் நடந்த நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக்சோலை, கோட்டையூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் டாக்டர் ஆனந்தன், கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, கல்லூரி சிறப்பு அலுவலர் வீரமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில்நாதன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த், பேரூராட்சி கவுன்சிலர்கள் கற்பகம், சுரேகா, மாவட்ட கவுன்சிலர் ராதாபாலசுப்பிரமணியன், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் சொக்கலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்