தொழிலாளியை வெட்டிக்கொன்ற மருமகன் கைது

திருக்காட்டுப்பள்ளி அருகே குடும்ப தகராறில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-28 19:36 GMT
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி அருகே குடும்ப தகராறில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப தகராறு
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து வடக்கு தெருவில் வசித்து வந்தவர் முருகேசன்(வயது 58). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மகள் ஸ்ரீதேவி(28).
 இவருக்கும் விஷ்ணம்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ்(35) என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீதேவியும், பாக்கியராஜும் கோவில்பத்து வடக்கு தெருவில் வசித்து வந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் இரவு பாக்கியராஜ் வீட்டுக்கு சென்று முருகேசன் கேட்டுள்ளார். 
அரிவாளால் வெட்டிக்கொலை
அப்போது திடீரென்று வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பாக்கியராஜ், முருகேசனை வெட்டினார். 
இதில் பலத்த காயம் அடைந்த முருகேசனை சிகிச்சைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
கைது
இது குறித்து பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகன் பாக்கியராஜை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்