அகில இந்திய தடகள போட்டிக்கு கரூர் மாணவி தேர்வு
அகில இந்திய தடகள போட்டிக்கு கரூர் மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
கரூர்,
பெங்களூரில் நடைபெறும் அகில இந்திய அளவிலான கேலோ இந்தியா தடகள போட்டிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவி துர்கா தேர்வு செய்யப்பட்டு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதனையடுத்து அகில இந்திய அளவிலான போட்டிக்கு கலந்து கொள்ள செல்லும் கல்லூரி மாணவியை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.