காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து கருத்து கேட்பு

கருத்து கேட்பு நடந்தது.

Update: 2022-04-28 19:06 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரத்தில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தனி மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கருப்பத்தூர் கிராமத்தில் நிலம் எடுப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.கூட்டத்தில் கிராம நில உரிமையாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து மனுக்களை அளித்தனர். இதில், தாசில்தார்கள் செந்தில், ஈஸ்வரன், நீர் ஆதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



மேலும் செய்திகள்