மோட்டார் சைக்கிள் திருட்டு
செஞ்சி அருகே மோட்டர் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
செஞ்சி,
செஞ்சி தாலுகா அனந்தபுரம் பணமலை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் அய்யப்பன்(வயது 25). சம்பவத்தன்று இவரும், அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளை நிலத்தின் அருகே நிறுத்தி வைத்துவிட்டு இருவரும் நிலத்தில் தூங்கிக்கொண்டிருந்தனா்.
அப்போது யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அய்யப்பனின் தாயார் லலிதா கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டர் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.