விராலிமலையில் போலீஸ் ஏட்டுவின் மோட்டார் சைக்கிள் திருட்டு மர்ம நபருக்கு வலைவீச்சு
விராலிமலையில் போலீஸ் ஏட்டு மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விராலிமலை:
விராலிமலை தாலுகா ராஜகிரி ஊராட்சி கூத்தாண்டம்மன் கோவிலை சேர்ந்தவர் முருகேசன் மகன் சிவகுமார் (வயது 42). இவர் திருச்சி கியூ பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஊர் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்று விராலிமலையில் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக கடைவீதியில் உள்ள தபால் நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது தனது மோட்டார் சைக்கிளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.