சிவகாசி பஸ் நிலையம் முன்பு போக்குவரத்து நெரிசல்

சிவகாசி பஸ் நிலையம் முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாததால் நேற்று கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

Update: 2022-04-28 18:45 GMT
சிவகாசி
சிவகாசி பஸ் நிலையம் முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாததால் நேற்று கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
போக்குவரத்து நெரிசல்
சிவகாசி பஸ் நிலையம் உள்ள பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருக்கும். இவர்கள் சிவகாசி பஸ் நிலை யத்தை கடந்து நகரில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை பஸ் நிலையம் அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் இல்லை. இதனால் நகரின் 4 பக்கங்களிலும் இருந்து வந்த வாகனங்கள் பஸ் நிலையம் உள்ள பகுதியை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டன.  பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். சாத்தூர் ரோடு, நாரணாபுரம் ரோடு ஆகிய பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் நகருக்குள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. அந்த நேரத்தில் பஸ் நிலை யத்தில் இருந்து மினி பஸ்கள் மற்றும் பஸ்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
மாற்றுப்பாதை
இதுகுறித்து பஸ் நிலையம் அருகில் கடை நடத்தி வரும் சிங்கராஜ் குமார் கூறியதாவது, சாத்தூர் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பஸ் நிலையத்தை கடந்து செல்லாமல் காந்தி ரோட்டை அடைய மயானம் அருகில் ஒரு பாதை உள்ளது. இந்த பாதையை முறையாக சீரமைத்து கொடுத்தாலே 20 சதவீத வாகனங்கள் அந்த வழியாக செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இந்த பாதையை சரி செய்து கொடுத்து விட்டு நகரின் கிழக்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்களை பஸ் நிலையம் முன்பு நிறுத்தாமல் எதிர் திசையில் செல்ல ஏற்பாடு செய்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறும் போது எதிர் திசையில் வாகனங்கள் வருவதை தடுத்து நிறுத்தி அனுப்பி வைக்க போதிய போலீசார் நியமிக்க வேண்டும் என்றார்.
சிவகாசி பஸ் நிலையத்தை சுற்றி உள்ள இடங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனாலே அந்த பகுதியை கடந்த செல்ல மாணவர்கள் சிரமம் அடைகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக அந்த பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்