திருமணம் ஆகாத விரக்தியில் ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-28 18:39 GMT
மொரப்பூர்:
பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் மணிவாசகம் (வயது 25). இவர் 108 ஆம்புலன்சில் தற்காலிக ஊழியராக ஈரோட்டில் பணிபுரிந்து வந்தார். இவர் பல இடங்களில் தேடியும் வரன் கிடைக்காததால் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வீட்டுக்கு வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்