ராமேசுவரம், மண்டபம் பகுதியில் பலத்த மழை
ராமேசுவரம், மண்டபம் பகுதியில் பலத்த மழை ெபய்தது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, பிரப்பன் வலசை, மண்டபம் வேதாளை, சுந்தரமுடையான் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. பகல் முழுவதுமே வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு இருந்ததுடன் வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ச்சியாக இருந்தது.
இதேபோல் ராமேசுவரம் பகுதியிலும் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் பஸ் நிலையம் செல்லும் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மாவட்டத்தில் பல ஊர்களில் நேற்று கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.