அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா

அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடந்தது.

Update: 2022-04-28 18:30 GMT
கரூர்
நொய்யல், 
தவிட்டுப்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி பூச்சூடுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார். அதேபோல் அம்மனுக்கு பால், பழம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அம்மன் சிங்க வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே செம்பாடாபாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் கடந்த 26-ந்தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 2-ம் நாள் ஆடு,கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 3-ம்நாள் அம்மன் பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின்னர் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்