பரமத்திவேலூரில் ரூ.17 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.17 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

Update: 2022-04-28 18:24 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 28 ஆயிரத்து 333 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.  இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.91.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ.76.35-க்கும்‌, சராசரியாக ரூ.89.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.24 லட்சத்து 45 ஆயிரத்து 401-க்கு வர்த்தகம் நடைபெற்றது. 
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு ‌19 ஆயிரத்து 510 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.90.01-க்கும், குறைந்தபட்சமாக ரூ.78.15-க்கும், சராசரியாக ரூ.88.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16 லட்சத்து 97 ஆயிரத்து 76-க்கு வர்த்தகம் நடைபெற்றது.  தேங்காய் பருப்பின் விலை சரிவடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்