கட்டிட பணியின் போது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி சாவு

5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-28 18:23 GMT
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே மேலக்கோட்டையை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி மாரிக்கண்ணு என்கிற ஆனந்தி (வயது 35). கூலி தொழிலாளியான இவர், ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் உள்ள 5-வது மாடி கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கட்டிடத்தில் இருந்து ஆனந்தி கால் தவறி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆனந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்