நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் பொருளாதார துறை சார்பில் அடிப்படை ஆராய்ச்சி முறை மற்றும் புள்ளிவிவர ஆராய்ச்சி மென்பொருள் குறித்து 2 நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாரதி தொடங்கி வைத்தார். பொருளாதாரத் துறை தலைவர் புவனேஸ்வரி வரவேற்றார்.
இதில் கோவை அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் சம்பத்குமார், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக பொருளியல் துறை இணை பேராசிரியர் ரவி, சேலம் அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு புள்ளிவிவர ஆராய்ச்சி மென்பொருள் செயல்பாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கி பேசினர். இதில் ராசிபுரம், சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.