கரூரில் புதிய வேளாண் கல்லூரி: தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கரூரில், புதிய வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டதால் தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதில் மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா, சக்திவேல், தெற்கு மாநகர பொறுப்பாளர் சுப்பிரமணியன் உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.