தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை
அருமனை அருகே தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.;
அருமனை,
அருமனை அருகே தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை
செய்து கொண்டார்.
தற்கொலை
அருமனை அருகே உள்ள கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(வயது 43). இவர் கடையாலுமூடு சந்திப்பு அருகே காய்கறி மற்றும் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு சிமிரெட்(39) என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜெகதீசுக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சொத்துக்களை விற்று தொழில் செய்து வந்தார். மீண்டும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், கடன் தொல்லையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக ஜெகதீஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் ஒரு பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர், இதுபற்றி கடையல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.