பஸ்சில் பயணிகளுடன் தகராறு: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

பஸ்சில் பயணிகளுடன் தகராறு செய்ததாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்

Update: 2022-04-28 18:05 GMT
சிவகங்கை
சிவகங்கை தாலுகா போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் (வயது 50). இவருக்கு நேற்று முன்தினம் இரவு மலம்பட்டி சோதனைச்சாவடியில் பணி ஒதுக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், சிவகங்கையில் இருந்து மேலூருக்கு சென்ற நகர்ப்புற பஸ்சில் சாதாரண உடையில் பயணித்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 
மேலும் அவர் பஸ்சில் சில பயணிகளுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் அவரை பணிஇடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்