மெகா கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்
வாய்மேடு ஊராட்சியில் நாளை 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வாய்மேடு:
வாய்மேடு ஊராட்சியில் நாளை(சனிக்கிழமை) 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் அறிவழகன் வரவேற்றார். ஊராட்சி துணைத்தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். முகாமில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம் 500 நபர்களுக்கு தடுப்பூசி போடவேண்டும். முழுமையாக தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் மற்றும் இரண்டாவது தவணை ஊசிகளும், இரண்டு தவணை ஊசி போட்டவர்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர், மற்றும் அனைத்து துறையினர் கலந்து கொண்டனர்.