சாராய எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வேதாரண்யத்தில் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

Update: 2022-04-28 17:57 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தமிழக அரசு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து கோட்டாட்சியர் துரைமுருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கல்லூரி பேராசிரியர் ராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் பாலாஜி, மகேந்திரன், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்