2 மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

2 மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Update: 2022-04-28 17:51 GMT
சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஈரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி அம்சா(வயது 30). இவர்களுக்கு ரணீஸ்(11) சபரீஸ்வரன் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் வீட்டிற்கு செல்லும்  வழிபாதையை சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அம்சா கீழ்குப்பம் போலீசில் புகார் அளித்தார். 
இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் அம்சாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அம்சா தனது மகன்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

2 மகன்களுக்குவிஷம் கொடுத்து... 

அதன்படி அம்சா தனது மகன்கள் ரணீஸ், சபரீஸ்வரன் ஆகியோருக்கு விஷத்தை குடுத்து குடிக்க வைத்துள்ளார். பின்னர் அவரும் விஷத்தை குடித்துள்ளார். 
சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரமேஷ் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

வீடியோ வைரல் 

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்சா தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன் வழி பிரச்சினையால் தொடர்ந்து சிலரால் பாதிக்கப்படுவதாகவும், இதனால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், எங்களுக்கு போலீசும் உதவி செய்யவில்லை என்றும், இனியும் உயிர் வாழ்வதை விட சாவதே மேல் என கூறி அம்சா தனது மகன்களுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. 

மேலும் செய்திகள்