ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் சிறுமி தற்கொலை முயற்சி

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் சிறுமி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-04-28 18:45 GMT
நன்னிலம்:-

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் சிறுமி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நார்த்தங்குடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், 17 வயது சிறுமி ஒருவரை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து சிறுமியிடம், அந்த படத்தை காட்டி மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.  
மேலும் மோகன்ராஜ் மற்றும் அவருடைய தந்தை தனிக்கொடி, தாய் சாந்தி, தம்பி பாக்கியராஜ் ஆகியோர் சேர்ந்து அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி உள்ளனர். 

சிறுமி தற்கொலை முயற்சி

இதனால் மனவேதனை அடைந்த சிறுமி சம்பவத்தன்று அரளி விதையை அரைத்துக்குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார், நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஒரே குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு

புகாரின் பேரில் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் மோகன்ராஜ் மீது ‘போக்சோ’ சட்டத்திலும், அவருடைய தந்தை தனிக்கொடி, தாயார் சாந்தி, தம்பி பாக்கியராஜ் ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 
இவர்கள் 4 பேரும் தலைமறைவாகி விட்டதால் தலைமறைவான 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்