தோவாளையில் கால்வாயில் மலைப்பாம்பு பிடிபட்டது

தோவாளையில் கால்வாயில் மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2022-04-28 17:47 GMT
ஆரல்வாய்மொழி, 
தோவாளையில் கால்வாயில் மலைப்பாம்பு பிடிபட்டது.
மலைப்பாம்பு 
தோவாளை ஆற்றுப்பாலத்தில் இருந்து பண்டாரபுரம் செல்லும் சாலையோரம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மலைபாம்பு ஒன்று தண்ணீல் ஊர்ந்து செல்வதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறைக்கு தெரிவித்தனர். அதைதொடர்ந்து பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின்பேரில் வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தார். பின்னர், அந்த பாம்பு அடர்ந்து வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

மேலும் செய்திகள்