பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது;பாலிடெக்னிக் மாணவர் கைது
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 18 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பாக பாலிடெக்னிக் மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 18 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பாக பாலிடெக்னிக் மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்ணுக்கு குழந்தை
சிவகங்கையை அடுத்த தமராக்கி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 22). இவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 18 வயதான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
போக்சோ சட்டத்தில் கைது
இது தொடர்பாக அந்த பெண்ணின் தாயார் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் மாணவர் ராஜாவை கைது செய்தனர்.