வேளாண் தொழில் நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்

வேளாண் தொழில் நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-04-28 17:44 GMT
வெளிப்பாளையம்:
வேளாண் தொழில் நுட்பங்களை  விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். 
கருத்தரங்கம்
சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை துறை சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு, இயற்கை விவசாய கருத்தரங்கம், வேளாண்மை பெருவிழா சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்தது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா தொடங்கி வைத்தார். 
அப்போது அவர் பேசுகையில், வேளாண்மை துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள செயல் விளக்க திடல்களை விவசாயிகள் பார்த்து பயனடைய வேண்டும். 
மேலும் வேளாண் தொழில் நுட்பங்களையும் விவசாயிகள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றார். 
கண்காட்சி
விழாவையொட்டி வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகியவற்றின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு, துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 
இதில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ராஜகுமார், வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ், தோட்டக்கலை துணை இயக்குனர்  திவ்யா, வேளாண்மை உதவி இயக்குனர் சிவக்குமார், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹினோ பர்னான்டோ, சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்