சேந்தமங்கலத்தில் பழக்கடைகாரர் தூக்குப்போட்டு தற்கொலை

சேந்தமங்கலத்தில் பழக்கடைகாரர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-04-28 17:43 GMT
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வந்தவர் குமரவேல் (வயது 55). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லாரி தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அதன் காரணமாக கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட குமரவேல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி கண்ணகி (42) சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட குமரவேலுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்