தலைஞாயிறு பகுதியில் உள்ள நிழற்குடை சீரமைப்பு

தலைஞாயிறு பகுதியில் உள்ள நிழற்குடை சீரமைக்கப்பட்டது;

Update: 2022-04-28 17:35 GMT
மணல்மேடு
மணல்மேட்டை அடுத்த தலைஞாயிறு பகுதியில், சர்க்கரை ஆலைக்கு எதிரே பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மிகவும் பழுதடைந்தது. நிழற்குடையில் உள்ள இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மேலும், நிழற்குடையை சுற்றி முட்கள் அதிகளவு வளர்ந்து புதர்போல காட்சி அளித்தது. இதனால், இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, `தினத்தந்தி' நாளிதழில் சமீபத்தில் படத்துடன் செய்தி பிரசுரமாகி இருந்தது. இதன் எதிரொலியாக பயணிகள் நிழற்குடை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. நிழற்குடையை சுற்றி வளர்ந்திருந்த முட்செடிகளும் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய `தினத்தந்தி'க்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், இந்த நிழற்குடையை இடித்து விட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்