வேலைக்கார பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவர் சிக்கினார்

வேலைக்கார பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவர் சிக்கினார்

Update: 2022-04-28 17:14 GMT
யாதகிரி: 
யாதகிரி டவுனை சேர்ந்த 35 வயது ஒரு பெண் வீட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த 26-ந்தேதி வழக்கம்போல் ஒரு வீட்டில் வேலை முடிந்து அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார். 

அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அந்த பெண்ணை, ஆட்டோ டிரைவர் கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். மேலும் இதனை தனது செல்போனில் படம்பிடித்த டிரைவர், தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த புகாரின பேரில் யாதகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரையும், அவரது நண்பர்களையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்